எமது பாடசாலையின் நடப்பாண்டுக்காண மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும். நியமன பத்திரம் வழங்கள் நிகழ்வும் 2024/07/23 திகதி செவ்வாய்க்கிழமை கல்லூரியின் முதல்வர் எம் ஏ சலாம்(SLPS) அவர்களின் தலைமையிலும்
ஒழுக்காற்று சபை தலைவர் MBM லாபீர் அவர்களினதும் உதவி அதிபர் MHI.இஸ்ஷத் அவர்களின் நெறிப்படுத்தல் இன் கீழ் கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மென்பொறியாளர் AR. றிஸ்வான் (அஸ்மா ஜுவலரி) அவர்களும் மற்றும் பேராசிரியர் Dr. MCA. நாசர் தென்கிழக்கு பல்கலைக்கழகம் அவர்களும் மேலும் இந்நிகழ்வுக்கு விசேட அதிதியாக பாடசாலை முன்னாள் அதிபரும் தற்போதைய மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் MSM. பைசால் அவர்களும் விசேட அதிதிகளாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் SL. ஹமீட் அவர்களும், பழைய மாணவர் சங்கச் செயலாளர் UL. ஹாஜா அவர்களும் அதிதிகளாக பாடசாலை பிரதி அதிபர் திருமதி ER. றினோஸ் ஹஜ்மீன் உதவி அதிபர்களான ARM.முஸாஜித்,UL. ஹிதாயா,MF.நஸ்மியா அவர்களும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர் இந்நிகழ்வில் 40 மாணவர் தலைவர்களுக்கான சின்னங்கள் சூட்டப்பட்டதுடன் நியமன பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் பிரதான பேச்சினை பேராசிரியர் Dr. MCA. நாசர் அவர்கள் வழங்கியதுடன் சிறப்புரை கண்ணியத்துக்குரிய மௌலவி J. றிபாஸ் (நஜாஹி) பேஷ் இமாம் மஸ்ஜிதுல் பத்ரியா ஜும்மா பள்ளிவாசல் அவர்களினால் நிகழ்த்தப்பட்டதுடன் இம்முறை நடைபெற்ற வலைய மட்ட மெய்வள்ளுநர் போட்டியில் அதிகூடிய இடங்களை பெறுவதற்காக பங்களிப்பினைச் செய்த விளையாட்டு ஆசிரியர்களான UL சிபான், AWM. அஸாட் கான் ,MAM.றியால் ஆகியோர் பழைய மாணவர் சங்க செயலாளரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் இஸ்லாமிய கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.





