அருள் மறை யளித்த நல்லிறையே அனுதினம் எமக்கருள் வாயே அருள்வாய்....அருள்வாய்....அருள்வாய்....
ஆய கலை பல பயின்றே ஆசான்களை நிதம் பணிந்தே இகபர வாழ்வு மேலோங்க ஈடினையிலானே அருள்வாயே அருள்வாய்....அருள்வாய்....அருள்வாய்....
உயிரினும் மேலாம் அன்னை, பிதா, குரு ஊக்கமுடன் பயிலெமெக்கும் எல்லையிலா உன்னருள் பெருக ஏகனே இறைஞ்சுகின்றோமோ அருள்வாய்....அருள்வாய்....அருள்வாய்....
ஒளிவிளக் கெம் பஹ்றியா வித்தியாலயம் ஓது நல் மாணவர் வாழ்க ஔடதமாம் கல்வி ஈயும் ஆசிரியர் குழாம் வாழ்க அருள்வாய்....அருள்வாய்....அருள்வாய்....
கல்வியும் செல்வமும் பெருக கற்றவனே என்றும் மேலோன் கற்றவர் வாழ்வு சிறந்திடவே கருணைபுரி யாரஹ்மானே... அருள்வாய்....அருள்வாய்....அருள்வாய்....





