மது பாடசாலையின் இரண்டாம் பிரிவானது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 6-11ம் ஆண்டு வரைக்கும் ஒரு பகுதியாகவும் உயர்தர பிரிவு ஒரு பகுதியாகவும் இயங்கி வருகின்றது. மேலும் நிர்வாகத்தினை இலகுபடுத்தும் முகமாக 6-9 வரைக்கும் ஒரு பகுதித்தலைவரின் கீழும் 10-11 ஆகிய வகுப்புகளுக்கு வேறொரு பகுதித்தலைவரின் கீழும் பொறுப்புகள் வழங்கப்பட்டு எமது பாடசாலையின் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. உயர்தரப் பிரிவானது இங்கு தனியாக தொழிற்படுவதுடன் எமது பாடசாலையில் விஞ்ஞான, கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகள் காணப்படுகின்றன. விஞ்ஞான, கலை மற்றும் வர்த்தகப் பிரிவில் மாணவர்களுக்கு பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றது.
| விஞ்ஞானப் பிரிவு | |||
| உயிரியல் | இரசாயனவியல் | பொளதிகவியல் | |
| இணைந்த கணிதம் | தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் | ||
| கலைப்பிரிவு | |||
| வரலாறு | பொருளியல் | அரசியல் விஞ்ஞானம் | புவியியல் |
| தமிழ் | |||
| வர்த்தகப்பிரிவு | |||
| பொருளியல் | தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் | வணிகக் கல்வி | கணக்கீடு |





