கமு /கமு/ அல் பஹ்றியா மகா வித்தியாலயம்.

கா.பொ.த (உ/த) 2025 ம் ஆண்டு மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை -2024

6-11 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை-2024

2-5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை-2024

whatsapp_image_2023-09-27_at_122020.jpg
whatsapp_image_2023-09-27_at_122020.jpg
  • ஒவ்வொரு மாணவரும் காலை 7.15க்கு முதல் வகுப்பறையில் இருத்தல் வேண்டும். வகுப்பறை மற்றும் சுற்றுச்சூழல் என்பன 7.30க்கு முதல் சுத்தம் செய்யப்படல் வேண்டும். எந்த ஒரு மாணவரும் பின் நேரம் 6:45க்கு பின் பாடசாலைக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • காலை ஒன்றுகூடலுக்காக மாணவர்களுக்கு ஒலி எழுப்பப்பட்டதும் உரிய நேரத்தில் ஒன்றுகூடல் நடக்கும் இடத்தில் ஒன்று கூடுதல் வேண்டும்.
  • காலை நேரத்தில் தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதம் மற்றும் ஏனைய போதனைகளின் போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பாடசாலை உத்தியோகத்தர்கள் சகலரும் அவற்றுக்கு மரியாதை செலுத்துதல் வேண்டும்.
  • பாடசாலை நேரத்தில் பாடங்கள் நடக்கும்போது எந்த ஒரு மாணவரும் ஏனைய வகுப்பில் அல்லது விளையாட்டு மைதானத்தில் அனுமதி இன்றி இருத்தல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
  • ஒரு பாடம் நிறைவுற்று மற்றைய பாடத்திற்கு 10 நிமிடத்திற்குள் ஆசிரியர் வரவில்லையாயின்  உரிய ஆசிரியரை வகுப்புத் தலைவர் அழைத்து வருதல் வேண்டும்.
  • வகுப்பறையை விட்டு வெளியேறி மாணவர்கள் ஏனைய பாடங்களுக்கு அல்லது ஆய்வு கூடங்களுக்கு செல்லும்போது மாணவர்கள் ஒழுங்கான முறையில் அணிவகுத்து செல்ல வேண்டும். இதனை உரிய பாட ஆசிரியர்கள் அவதானித்துக் கொள்ள வேண்டும்.
  • பாடசாலை நேரத்தில் வெளிநபர்கள் அனுமதியின்றி உள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • பாடசாலை நேரத்தில் முறையற்ற விதத்தில் தொலைபேசிகள் மற்றும் கமராக்கள் போன்ற இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. பாட பிரயோகங்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துவரச் சொல்லி இருந்தால் மாத்திரம் உரிய அனுமதியுடன் கொண்டு வருதல் வேண்டும்.
  • பாடசாலை நேரத்தில் உரிய அனுமதி இன்றி ஏதாவது விளையாட்டு சம்பந்தமான பயிற்சிகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
    மற்றும் பாடசாலை சம்பந்தமான விளையாட்டு ஆடைகளை விளையாட்டு மைதானம் தவிர்ந்த ஏனைய இடங்களில் அணிவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
  • பாடசாலை இடைவேளை முடிவுற்றதும் உரிய நேரத்துக்கு வகுப்பறைகளில் சென்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடல் வேண்டும்.
  • பாடசாலையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து உபகரணங்களையும் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் வைத்திருத்தல் ஒவ்வொரு மாணவர் மற்றும் ஆசிரியர் மற்றும் பொறுப்பான அனைவரதும் கடமை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.