கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள எமது பாடசாலையான அல் பஹ்றியா மகா வித்தியாலயமானது எமது பிரதேச மக்களால் கல்முனை பஹ்றியா என அழைக்கப்படுகின்றது. 1948-06-25ஆம் திகதி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையாக இது உருவாக்கப்பட்டது. கல்முனை மாநகர சபையில் கல்முனை கடற்கரை பள்ளிவாயலுக்கு அருகில் அழகான சூழலில் அமைந்துள்ள எமது பாடசாலை பல்வேறு வளங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இங்கு ஆரம்பபப் பிரிவு மற்றும் இரண்டாம் நிலைப் பிரிவு என்பன அமைந்துள்ள அதேவேளை இங்கு உயர் தரத்தில் கலை மற்றும் வர்த்தகப் பிரிவும் அமைந்துள்ளது. எமது பாடசாலை கல்வி அமைச்சின் Type - C தரத்திலான பாடசாலையாக காணப்படுகிறது.
தேசத்தின் பொருளாதார, சமூக அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் வினைதிறனும், விளைதிறனும் நல் ஒழுக்கமுள்ள மாணவச் சமூகம்.
சூழலை இசைவாக்கி சவால்களை வெற்றிகொண்டு வாழக்கூடிய புத்தாக்க சிந்தனையும் மனித நேயமுமிக்க மாணவச் சமுதாயத்தை உருவாக்குதல்.