கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் 27, 28-ம் திகதிகளில் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளருமான  UL. றியால் தலைமையில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது

கல்முனை கோட்டத்தில் உள்ள கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களில் உள்ள 17 பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றியதுடன் 116 போட்டி நிகழ்சிகள் நடைபெற்றது

இதன் போது எமது பாடசாலையச் சேர்ந்த  மாணவர்கள் 
- 34 முதலாமிடங்களையும்
- 17 இரண்டாமிடங்களையும் 
- 05 மூன்றாமிடங்களையும், 

பெற்றுக்கொண்டனர். 

இதில் 12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 80m,LJ,HJ  போட்டிகளில் AMNF. Zilfa haya சம்பியனாகவும் 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100m,200m,400m போட்டிகளில் JF. Lubab அவர்களும்,300MH, 100MH,HJ போட்டிகளில் NF. Saja சம்பியனாகவும் 16 வயது ஆண்களுக்கான100M, 200M, LJ போட்டிகளில் MMM.yusaf  சம்பியனாகவும், 18 வயதுக்குட்டப்பட்ட ஆண்களுக்கான 100M,200M,400M போட்டிகளில் AJM.FOWSAN சம்பியனாகவும் ஆகவும் என மொத்தமாக 05 சம்பியன்களை பெற்று சாதனை புரிந்தனர். 
 இதற்காக பாடுபட்ட மாணவர்கள், பயிற்றுவித்த  விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்பதாக பாடசாலையின் முதல்வர் MSM. பைஷால் அவர்கள் தெரிவித்தார். 

எமது பாடசாலை மாணவர்கள் கடந்த வருடம் மாகாண மற்றும் தேசிய மட்டங்களிலும் இவ்வாறு சாதனை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.