எமது பாடசாலையில் பாடசாலையின் சுற்றுச்சூழலில் ஏற்படுகின்ற தொற்று நோய்கள் மற்றும் ஏனைய நோய்களிலிருந்து மாணவர்களை பாதுகாப்பதற்காக பாடசாலையில் பிரத்தியோகமாக சுகாதாரக் குழு என்ற பெயரில் மாணவர் குழு ஒன்றை உருவாக்கி உள்ளோம். இவர்கள் தங்களால் இயன்றவரை பாடசாலையினை சுத்தமாகவும் நோய்கள் வராமல் வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மேலும் சுகாதார மற்றும் வைத்திய நிபுணர்களைக் கொண்டு பாடசாலையில் மாணவர்களுக்கு அடிக்கடி சுகாதாரம் தொடர்பான வைத்திய ஆலோசனைகளையும் வழங்குவதோடு மாணவர்களுக்கு இலவச பரிசோதனைகளையும் மேற்கொள்கின்றனர்.
கிளப்புகள்





